புதன், 16 டிசம்பர், 2015

தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.




இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 16ஆம் தேதியன்றே, இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட தமிழகத்தில் 112 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததா இல்லையா?
தலைமைச் செயலாளரின் அறிக்கையில், 30-11-2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 50 செண்டி மீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்க வில்லை என்றும், ஆங்காங்கு மிக மிகுந்த கனத்த மழை பெய்யும் என்று தான் கூறப் பட்டிருந்தது என்று சமாளித்திருக்கிறார்
ஆனால் “இந்து” நாளிதழில், “Bloggers predict heavy rain on Monday 
(30-11-2015) and Tuesday in Coastal Regions of the State” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 27ஆம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறும்போது, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமனாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிகக் கன மழை பெய்யும்” என்று கூறி, அது நாளேடுகளில் வெளி வந்திருக்கிறதா இல்லையா?

இஸ்ரோ வி.எஸ்.எஸ்.சி.யின் இயக்குனர் சிவன் அவர்கள் அளித்த பேட்டியில், “சென்னையில் கன மழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து, தமிழக அரசுக்குத் தகவல் கூறினோம். ஆனால் அரசு முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை” என்றே தெரிவித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், 1-12-2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று (30-11-2015) இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் (1-12-2015) கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். 
தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் இதையெல்லாம் மூடி மறைத்து விட்டுத் திசை திருப்பும் அறிக்கை விடுவது சரிதானா? நீதி விசாரணை நடத்த முன் வராமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அ.தி.மு.க. அரசு உண்மைக்கு மாறாக இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடச் செய்திருப்ப திலிருந்தே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்து சென்னை மாநகரையும், இங்கே வாழும் மாநகரத்து மக்களையும், சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதில் அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் மாபெரும் தவறு செய்து விட்டது என்பதையும், அதை மூடி மறைக்கும் முயற்சி தான் தலைமைச் செயலாளரின் இந்த அறிக்கை என்பதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
1ஆம் தேதிக்கு முன்பே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து போதிய நீரை வெளி யேற்றியிருந்தால், 1ஆம் தேதி ஒரே நாளில் 29,000 கன அடி என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா?
நவம்பர் 17ஆம் தேதி ஏரியிலே 22.3 அடியாக நீர் மட்டம் இருந்த போது, 18 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியவர்கள்., நவம்பர் 30ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 22.05 இருந்த போது 800 கன அடி நீரை மட்டுமே அனுப்பியது தவறா இல்லையா? 
அதைத் தான் அனைத்து எதிர்க் கட்சிகளும் கேட்கின்றன. 
அதைத் தான் 11-12-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேயும், நவம்பர் 17ஆம் தேதி 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. ஆனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை மிகக் குறைந்த நீரே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விட்டது தான் சென்னை மாநகரிலே வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம். இந்தத் தவறை தலைமைச் செயலாளரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே வெள்ளத்திற்குக் காரணம் தமிழக அரசின் நிர்வாகம் தான் என்பதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை என்பது அ.தி.மு.க. அரசின் ஒப்புதல் வாக்குமூலம் தான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில், 1-12-2015 அன்று காலை 10 மணிக்கு 10,000 கன அடி நீரும், 12 மணிக்கு 12,000 கன அடி நீரும், 2 மணி முதல் 20,960 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டதாகவும், மாலை 5 மணி அளவில் அது 25,000 கன அடியாகவும், மாலை 6 மணிக்கு 29,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த அளவுக்கு ஒரே நாளில் நீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறும் தலைமைச் செயலாளர், அதற்கு முதல் நாள், அதிக நீரை வெளியேற்றாமல், வெறும் 800 கன அடி நீரை மட்டுமே வெளியேற்றியது மிகப் பெரிய, கொடுமையான தவறு தானே? அந்த அளவுக்கு நீரை மிக அதிகமாக வெளியேற்றிய காரணத்தினால் தானே சென்னை மாநகரிலே பேரழிவு ஏற்படவும், பிணங்கள் மிதக்கவும் நேர்ந்தது. அதற்கு இந்த அ.தி.மு.க. அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்?
தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீரையும், 12 மணிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரையும் திறந்து விட்டதாக சொல்லி விட்டு, அவரே அதே அறிக்கையின் அடுத்த பக்கத்தில் சென்னை மாவட்டக் கலெக்டர் 11.20 மணிக்கு 7,500 கன அடி நீரை வெளியேற்றப்பட்டதாக அறிக்கை கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். இதிலே எந்தப் புள்ளி விவரம் சரியானது?
பொறியாளர்கள் யாரும் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர், முதலமைச்சர் ஆகிய யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை, அவ்வாறு கூறுவது தவறு என்று தலைமைச் செயலாளர் அறிக்கையிலே கூறுகிறார். அதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், கீழ் மட்டத்திலே உள்ள அதிகாரிகள் அவர்களாகக் கேட்காவிட்டாலும், மேலே உள்ள அதிகாரிகள் தாங்களாக மழையின் நிலைமையை உணர்ந்து ஆணை பிறப்பித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? எனவே பழியை கீழ் மட்ட அதிகாரிகள் மீது போட்டு, தலைமைச் செயலாளர் தப்பிக்க நினைப்பது தவறு.
                                                                                                                                 - கலைஞர்,
======================================================================================================
இது உண்மையா?
அந்த இணைப்பில் சென்றால் இணைப்பு கிடைக்கவில்லை.
நீக்கம்  செய்து விட்டார்களா என்ன?
உண்மைதான்.
அந்த பக்கம் இதுதான்.
ஆனால் தற்போது நீக்கப்பட்டு விட்டது.




வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

கொஞ்சம் ஜப்பானை பார்க்கவும்,

‘இனி பருவமழை என்பதே கிடையாது. 
காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் என ஏதாவது காரணங்களால் மழை பெய்தால்தான் உண்டு. கடலூரிலும், காஞ்சிபுரத்திலும் பெய்தது போல, பருவநிலை மாற்றங்களால் திடீரென சில மணி நேரங்களில் ஒரே இடத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும். 


கிராமங்கள் சமாளித்து விடலாம். 
ஆனால் சென்னை போன்ற நகரங்கள் இதைத் தாங்காது’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள்.

 இதேபோன்ற பிரச்னைகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான், புதுமையான முறையில் இதற்குத் தீர்வு கண்டிருக்கிறது.

நம் சென்னையின் மடிப்பாக்கம், முடிச்சூர் போல ஜப்பானின் புறநகர்ப் பகுதி சாய்டாமா. இங்கிருக்கும் இந்தக் கட்டிடத்தை ‘சுரங்கக் கோயில்’ என வழிபடுகிறார்கள் ஜப்பான் மக்கள். 

டோக்கியோவின் புறநகர்ப் பகுதிகள் பலவும் மக்கள் நெரிசலில் தவிக்கின்றன. என்னதான் வடிகால் வசதிகள் பக்காவாக இருந்தாலும், திடீரென ஒரு சூறாவளியோடு மழை வந்து தாக்கும்போது, எல்லா குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. 
இப்படி தொடர்ச்சியாக ஐந்து வெள்ள பாதிப்புகளிலிருந்து பாடம் கற்ற ஜப்பான் அரசு, இதற்குத் தீர்வாக தரைக்கு அடியில் ஒரு மெகா தண்ணீர்த் தொட்டி கட்ட முடிவெடுத்தது. 
சாய்டாமா பகுதியில் ஒரு கால்பந்து மைதானம் மற்றும் பூங்காவுக்குக் கீழே இது இருக்கிறது. தொட்டி என்றால் ஏதோ நம் வீட்டு மொட்டை மாடியில் வைப்பது போன்றதல்ல இது! 
ஒரு பெரிய ஏரிக்கு சமமானது.

தரைக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்க நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து மைதான சைஸில் 5 டேங்குகள். 83 அடி உயரம், 255 அடி அகலம், 580 அடி நீளம். ஐந்தையும் கால்வாய்கள் இணைக்கின்றன. 
இந்தக் கால்வாய்கள் சுரங்கத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீள்கின்றன. திடீரென மழை கொட்டும்போது டோக்கியோ புறநகர்ப் பகுதிகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர், கால்வாய்கள் வழியாக இங்கு கொண்டு வரப்படுகிறது. 
ஒரு நொடியில் 200 டன் வெள்ள நீரை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது.

ஒரு தொட்டி நிரம்பியதும் அடுத்த தொட்டிக்கு தண்ணீர் போகும். 
இப்படியே ஐந்து தொட்டிகளும் மொத்தமாக நிரம்பிவிட்டால், உபரி நீரை வெளியேற்ற ஜெட் விமானத்தை இயக்கும் திறன்கொண்ட நான்கு எஞ்சின்கள் உள்ளன. இவை உபரி நீரை வெளியேற்றி எடோ நதியில் விடும். 
அந்த நதி தாழ்வான பகுதியில் ஓடி கடலில் கலப்பது என்பதால், அதன்பின் பிரச்னை இருக்காது.

‘உலகின் மிகப்பெரிய சுரங்க வெள்ள நீர் வடிகால் அமைப்பு’ எனப் பெயர் பெற்றிருக்கிறது இது.  ஒருநாள் முழுக்க பேய்மழை கொட்டித் தீர்த்தாலும், டோக்கியோ புறநகரின் வெள்ள நீர் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது இது. 
சுமார் 19 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் இதை வடிவமைத்து உருவாக்க 18 ஆண்டுகள் ஆனது.

சேமிக்கும் மழைநீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தவும் இதில் வசதி இருக்கிறது. எனவே ‘மழைநீர் வீணாகக் கடலில் கலந்தது’ என்பது போன்ற செய்திகளை ஜப்பான் செய்தித்தாள்களில் பார்க்கவே முடியாது . 
நீர் இல்லாமல் சும்மா இருக்கும் காலங்களில் இது ஒரு சுற்றுலாத் தளம் ஆகிவிடுகிறது. 
அதோடு, சினிமா ஷூட்டிங்கும் ஆர்வமாக நடத்துகிறார்கள்.

சென்னையின் மழைநீரில் மக்களையும் வீடுகளையும் மிதக்கவிட்டு வேடிக்கை பார்த்து, அதன்பிறகு கோடையில் அவர்களை காலி குடங்களோடு வீதியில் அலையவிடும் அரசு, கொஞ்சம் ஜப்பானைத் திரும்பிப் பார்க்க வேண்டும். 
========================================================================================
இயற்கை சீற்றங்களை விலங்குகள் 
முன்னதாக அறியும்.

பெங்சூயி விஞ்ஞானியான ‘‘ஐ சிங்” ( I CHING ) என்ற அறிஞரால் வெளியிடப்பட்ட ‘‘மாற்றங்களின் நூல்” என்ற புத்தகம் மனித வாழ்வின் பரிமாணங்கள், மாற்றங்களைத் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.

நீர், வாயு போன்றவற்றைக் கொண்ட பூமியின் வளர்ச்சியை கண்டுணர்ந்த மனிதன் அதன் அளவிடமுடியாத அபார சக்தியை எப்படி எளிமையாக பயன்படுத்த இயலும் என்பதை விரிவாக அந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார். இந்த உத்திகளை இப்போதைய உலகிலும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கொள்ள இயலும் என அறுதியிட்டு உரைக்கிறார். 
 இப்புத்தகம், மனித கோட்பாடு, நடைமுறையைத் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. சீன மக்களின் கீதையாக உள்ள இப்புத்தகம், கடைபிடிக்க வேண்டிய பல வாஸ்து அம்சங்களை விவரிக்கிறது. 

உலக அறிவிற்கு எட்டாத அறிவியல் உலகின், முயற்சிக்கு அப்பாற்பட்ட பல கருத்துகளை முன் வைக்கிறார். மனித உடற்கூறு எவ்விதம் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை சின்னங்கள் மூலம் விளக்குகிறார்.
நம் பதஞ்சலி முனிவர் உடல் பாகுபாடு, செயல்பாடு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது போல ஐ சிங்கும் சீனர்களுக்கு வாஸ்து/பெங்சூயி சூட்சுமங்களை போதிக்கிறார்.

நெருப்பு, நிலம், உலோகம், நீர் மற்றும் மரம் ஆகிய ஐந்து அம்சங்களை வைத்து அவற்றின் மூலம் மனித மேம்பாட்டிற்கு வழிகாட்டுகிறார். மின்காந்த புலனை இயற்கை ஒருங்கிணைப்போடு சேர்த்து இயல்பான உயர்வை மனிதன் அறிய வேண்டி பல உபாயங்களை அளிக்கிறார்.
நம் கோயில் கோபுரங்களின் உச்சியில் கூரான செம்பு, பித்தளை கலசங்களை நிறுவி மின்னல், இடியிலிருந்து தப்பிக்கும் உபாயத்தை நம் முன்னோர் கடைபிடித்ததையும், கோயில்களில் சேமிக்கப்படும் தானியக் குவியல் பஞ்ச காலத்தில் மக்களின் பசி தீர்த்ததையும் நாம் அறிவோம்.

இதையே ‘‘சிம்” (CHIME) வடிவில் பயன்படுத்த இயலும் என்கிறார் ஐ சிங். ‘‘டோ” தத்துவம் (TAOISM) என்பது சீனர்களிடையே மிகப்பிரபலம். இது பழங்கால நாகரீகமாகவும், இயற்கையின் மாற்றங்களை உணரத்தக்க அடையாளமாகவும் உள்ளது. 
சுனாமி, நிலநடுக்கம், கடும் வெள்ளம், பனிச்சிதைவு போன்று இன்றைய நாளில் நாம் அனுபவிக்கும் இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வைக்கிறது. 

எறும்புகள் இரையை வேகமாக சேமிக்கின்றன என்றால் அது திடீரென ஏற்படக்கூடிய வெள்ளத்திற்கான முன் அடையாளம் என்று அவர்கள் தெரிந்துகொண்டார்கள். 
ஆமைகள், கடலிலிருந்து கடற்கரையை நோக்கி விரைகின்றன எனில் அது கடல் சீற்றத்தின் முன்னேற்பாடே என்றும் டோ தத்துவம் உணர்த்துகிறது. இவற்றை அறிந்து மனிதனும் இயற்கையின் சீற்றத்துக்கு முன்னாலேயே பாதுகாப்பு தேடிச் செல்ல முடியும். 
எறும்புப் புற்று உள்ள இடத்தில், பூமியில் நீர் ஆதாரம் நிலத்தில் உண்டு என்றும் அறிந்து கொண்டனர்.
சென்னை வெள்ளம்இயற்கையால் உண்டானதல்ல. மனிதனால் திடீரென 
உ ண்டாக்கப்பட்டது.அதானால்  ஆள்பவர்கள்தவிர மற்றவர்களால் அதை
உணர முடியாமல் பொய் விட்டது. 


வீதிக்கு வாருங்கள் முதல்வரே! 
வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. 
ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். 
ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர். 
அடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை. 
ஆனால் நடப்பது என்ன?
அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘
மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. 
யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்?
பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர். 
வரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா? 
குறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா? 
ஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன?
‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார். 
அதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது. 
ஆனால், அது தப்புக்கணக்கு. 
ஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. 
இருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 
அரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு பேசுகின்றனர். 
அந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும். 
ஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் ஜெயலலிதா  அவர்களே!
===========================================================================================


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...