சனி, 17 பிப்ரவரி, 2018

ஆயிரத்தில் ஒருவர் ஆத்யநாத் ?

மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது மாநில முதலமைச்சராக  யோகி ஆதித்யநாத் பொறுப்பில் வந்தது முதல் "என்கவுண்டர்" செய்யும் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 
உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 1200 என்கவுண்டர்களில், பொதுமக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய 40 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.
 அதை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டசபையிலேயே புள்ளிவிபரங்கள் கூறுகையில்  உறுதிபடுத்தினார்.

 போலிஸின் என்கவுண்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று அவர் உறுதியாக சொன்னார்.
இந்த  என்கவுண்டர் விவகாரத்தில் ஆளும்யோகி ஆதித்யநாத், பாரதிய ஜனதா கட்சி மீது எதிர்கட்சிகள்,மக்கள்,சமூகநல,அமைப்புகள்  குற்றம் சுமத்துகின்றன. 
யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு எல்லா விதத்திலும் தோல்வியடைந்து விட்டதாகவும், அதன் குறைபாடுகளை பூசி மறைப்பதற்காக என்கவுண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டுகிறது.
சமாஜ்வாதி கட்சி ராஜேந்திர செளத்ரி பேட்டியில் "உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சித் தலைவர்களின் செயல்பாடு, அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக  மேலும், மாநிலத்தின் 22 கோடி மக்கள் அரசாங்கத்தின் இலக்காக உள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர், இளைஞர்களுக்கோ வேலைவாய்புகள் இல்லை, நீதி கேட்டு லக்னோவுக்கு வரும் மக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.
மதுராவில் ஜனவரி 18ஆம் தேதியன்று நடந்த என்கவுண்டரில் மூன்று வயது  குழந்தை  துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானது.என்கவுன்டருக்கும் மூன்று வயது குழந்தைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? 

 நொய்டாவில் நடத்தப்பட்ட ஒரு என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம்  ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு, மாநில அரசின் என்கவுண்டர்களின் இலக்கு சிறுபான்மை சமூகத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
என்கவுண்டரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர், மேலும் பழி வாங்கும் எண்ணமும் நிறைவேற்றப்படுகின்றன.ஆனால் குற்றவாளிகள்,குண்டர்கள் பாஜக முத்திரையுடன் வளம் வருகின்றனர்.மாட்டிறைசி என்று மக்களை தாக்கி கொள்கின்றனர்.
தங்களுக்கு வாக்களிக்காத பகுதி மக்களை தேர்ந்தெடுத்து தண்டிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகளே அரசின் இலக்கு. என்கவுண்டர்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்."
என்றுள்ளார்.
என்கவுண்டரை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைக்கு அரசு பயன்படுத்துகிறதா? குறிப்பிட்ட சிலர் இலக்கு வைக்கப்படுகிறார்களா? 
என்பது போன்ற கேள்விகளுக்கு உ. பி,  முன்னாள் ஐஜி எஸ்.ஆர். தாராபுரிஎ
"ன்கவுண்டர்களில் பெரும்பாலானவை மாநில அரசின் ஆதரவுடன்ஆள்வோர் தரும் பட்டியல்படியே  நடத்தப்படுவதாகவும், என்கவுண்டர்களில் 90% போலியானவை.
அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர்களில், ஆளும் கட்சிக்கு எதிரானவர்களும் பயனில்லாதவர்களும், அவர்களால் ஒடுக்க விரும்பும் பிரிவினரும் இலக்காக இருப்பார்கள். உத்தரப்பிரதேச மாநில அரசு என்கவுண்டர் தொடர்பாக ஒரு புள்ளிவிவரம் வெளியிட வேண்டும். 

எனக்கு தெரிந்த வரையில் என்கவுண்டர்களில் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் இருப்பார்கள். உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் இருக்கமாட்டார்கள். 
அதில் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காலில் சுடப்பட்டவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று பிரித்து காண்பித்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்.
என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கூறினார். 
காலில் சுடப்பட்ட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 
எனக்கு பத்திரிகையாளர்கள்,காவல்துறை நண்பர்கள் கூறியதை வைத்துப் பார்க்கையில் அப்பாவி பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் , தலித்துகளுமே என்கவுண்டரில்  இலக்கு." என்று பதில்  தருகிறார்.
90% அதிகமான என்கவுண்டர்கள் போலியானவை. 
உண்மையான என்கவுண்டர்கள் அரிதாகவே இருப்பதாக நம்புகிறேன். என்கவுண்டவர்கள் பெரும்பாலும், திட்டமிடப்படுகிறது அல்லது மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்பவே நடைபெறுகின்றன
முன்னாள் காவல்துறை அதிகாரி  எஸ்.ஆர். தாராபுரி.


உத்தரப் பிரதேசத்தில்  ஆயிரக்கணக்கில் நடக்கும் என்கவுண்டர்களை  அடுத்து, மாநில அரசு இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
என்கவுண்டர்கள் மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுமா என்றால் காவல்துறை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. போலிசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதைத்தவிர வி.ஐ.பி பாதுகாப்பு, தேர்வுகளுக்கு, தேர்தலுக்கு பாதுகாவல் பணி என்று அவர்கள், உண்மையான காவல்துறைப் பணிகளில் இருந்து மடை திருப்பப்படுகிறார்கள். இதனால்தான் குற்றங்களை கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது.
சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், ஹாஷிம்பூரா என்கவுண்டர் ஆகிய பல என்கவுண்டர்கள் போலி என்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

தற்போது உ.பி.யோகி ஆத்யநாத் நடத்தும் ஆயிரக்கணக்கான என்கவுண்டர்கள் பின்னணி நீதிமன்றத்தில் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவு உத்தரப்பிரதேசத்தில்  நடக்கும் ஆயிரக்கணக்கான  என்கவுண்டரில் எவ்வளவு உண்மை இருக்கும்.
அதுவும் மீண்டும்,மீண்டும் மதக்கலவரங்கள் ,மாட்டிறைச்சி கலவரங்கள் நடக்கும் இடங்களில் அல்லாமல் பிற்பட்டோர்,தலித்,முஸ்லீம்கள் பகுதியில் நடப்பதுதான் ஆத்யநாத் மீது ஐயம் வரவைக்கிறது.
காரணம் அங்கெல்லாம் பாஜக நோட்டாவை மட்டும் வென்ற இடங்கள்.


                                                         1991 இல் வங்கி சேவை விளம்பரம்.
                            எப்படியிருந்த நான்,இப்படி ஆயிட்டேன்?-பொதுத்துறை வங்கிகள்.
========================================================================================
 மக்கள் பணம் 11,400 கோடிகளை நீரவ் மோடிக்கு வாரி வழங்கி சாதனை படைத்த  பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் வங்கி அலுவலகம்.கான்பட்றை சாலை,லாகூர்.(1894)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...