திங்கள், 12 மார்ச், 2018

சேற்றில் இறங்கியவன் தெருவில ....

இந்தியா முழுக்க விவசாயம் செய்வோர் பாஜக அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.விவசாய நிலங்கள் பெரும் நிறுவங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன.
விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் அதே அரசுதான் 11700 கோடிகள்,10000கோடிகள் என்று பணமுதலைகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்கிறது.அல்லது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட வசதிகள் செய்து கொடுக்கிறது.

தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத்தரமறுக்கும் பாஜக அரசு அந்த விவசாயநிலங்களை கைப்பற்றி பெட்ரோல் ,எரிவாயு எடுக்கும் எண்ணை வயல்களாக மாற்றுகிறது.
விவசாயிகளோ இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களின் கோரிக்கையை மாநில அரசும்,மத்திய அரசுகளும் கண்டுகொள்வதில்லை.
கவுதமி போன்ற மார்க்கெட் இல்லா நடிகைகள்கூட  சந்திக்க எப்போதும் நேரம் ஒதுக்கும் நமது பிரதமருக்கோ விவசாயிகள் மனுவை வாங்கக்  கூட நேரம் இல்லை.
இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட மராட்டிய மாநில விவசாயிகள் முதல் அட்டையை எடுத்து வைத்துள்ளார்கள்.
 மகாராஷ்டிரா மாநிலத்திலும்  வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் நசிவடைந்துள்ளது . 
விவசாயத்துக்கு வாங்கிய  கடன்சுமை காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 
இதனையடுத்து முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வன உரிமை சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணியை மேற்கொண்டனர்.
அகில இந்திய கிஷான் சபா சார்பில் மார்ச்  5-ம் தேதி நாசிக்கில் வெறும் நூறு பேரில் துவங்கிய பேரணிதொடங்கிய இந்த பேரணி, 180 கி.மீட்டரை கடந்து நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது. 
இந்தப் பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இவர்களின் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதனால் வெறும் நூறு பேரில் துவங்கிய பேரணி தற்போது 40ஆயிரம் பேரை கடந்துந்துள்ளது. 
 விவசாயிகளின் இந்த எழுச்சியை சற்றும் எதிர்பார்காதாத மகாராஷ்டிரா மாநிலமும் பாஜக அரசும் சிகப்பு அலை போல் வரும் மாபெரும்  விவசாயிகளின் பேரணியால்  முற்றிலுமாக அதிர்ந்துபோயுள்ளது.
தற்போது மும்பை தானே நெடுஞ்சாலையில் விவசாயிகள் பேரணி நகர்ந்த 200 கிலோமீட்டர் பயணித்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தலைநகர் மும்பைக்குள் ஞாயிறன்று நுழைந்தனர். 
அவர்களுக்கு மும்பை நகர மக்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர். 
மும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆனந்த் நகரிலிருந்து ஞாயிறன்று ஆறாவது நாள் பயணத்தை விவசாயிகள் துவங்கியபோது பலரது காலணிகள் ஏற்கனவேஅறுந்துவிட்ட நிலையில் வெறும் காலில் நடந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் காலில்வெடிப்புகள் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் தளராத உறுதியோடு நெடும்பய ணத்தில் முழக்கமிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். 
நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 76 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. 
மோடி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயிகள் மேலும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். 
இதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நடத்திய 11 நாள் பல்வேறு விவசாயஅமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்தின. அப்போது மாநில பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 
இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதை கைவிட வேண்டும். விவசாயிகளின் விருப்ப த்துடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
 விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 
வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
 ஏழைகளுக்கு வழங்கும் ரேசனை தொடர வேண்டும். 
விவசாயிகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை அமல் படுத்தி தற்கொலையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் 
உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த நெடும்பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விதான் பவன் என்கிற மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மும்பை நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார்கள். 

கடந்த செவ்வாயன்று நாக்பூரில் தொடங்கிய இந்த நெடும்பயணம் 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறது. 
செங்கொடியும், சிவப்பு தொப்பியுமாக வரும் விவசாயிகளுக்கு வழியெங்கும் மக்கள்வரவேற்பு அளிப்பதோடு ஆயிரம் ஆயிரமாக புதிய பகுதி விவசாயிகள் இணைந்து அவர்களுடன் நடக்கிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்தி வரும் இந்த நெடும்பயணத்திற்கு பல்வேறு அமைப்பு களும், அரசியல் கட்சியினரும் பேராதரவு அளித்து வருகின்றனர். 
பெரும் படையாக வந்துகொண்டிருக்கும் நெடும்பயணம் நகருக்குள் நுழையும்போதே தடுத்து நிறுத்த அரசும், காவல்துறையும் தயாராக இருந்தது.
ஆனால்  மும்பை நகர மக்கள் பிஸ்கட்,தண்ணீர்  உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர். 

ஞாயிறு மாலை நகருக்குள் நுழைந்த விவசாயிகளை மும்பை மக்கள் உற்சாக மாக வரவேற்றனர். 
திங்களன்று விதான் பவனில் விவசாயி கள் சங்க தலைவர்களான அசோக் தாவ்லே,அம்ராராம், விஜு கிருஷ்ணன், ஹன்னன் முல்லா, ஜிதேந்திர சௌத்திரி எம்.பி, கே.கே. ராகேஷ் எம்பி, பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசய்ய ஆதம், மகேந்திரசிங், மரியம் தாவ்லே உள்ளிட்டோர் விவசாயிகளை வர வேற்று உடன் செல்ல உள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டசபையை முற்றுகையிட உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா நிதி அமைச்சருமான சுதிர் முங்கந்திவார் கூறுகையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய குழுக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அகில இந்திய கிஷான் சபா அமைப்பின் பொதுச் செயலாளர் அஜித் நாவலே கூறுகையில், அரசு உறுதியான வாக்குறுதிகளை எழுத்துபூர்வமாக வழங்காவிட்டால், சட்டசபையை நோக்கிய பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார். விவசாயிகளின் இந்த பேரணியால் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்துள்ளது.

 பேரணியில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளுக்கு அவ்வப்போது உணவுப்பொட்டலங்கள்,தண்ணீர்,பிஸ்கட்,பழங்களை டெல்லி,சிக்கிம் விவசாயிகளும் , பல்வேறு அமைப்பினரும்   வழங்கி வருகின்றனர்.
வழக்கம் போல் இந்தியாவை சேர்ந்த நடுநிலை ஊடகங்கள் ஒன்று கூட  இதுவரை இந்த விவசாயிகள் எழுச்சியை செய்திகளாக மக்களுக்கு வழங்கவில்லை என்பதும் செய்தித்தாள்களில் மரட்டைய மாநில செய்தித்தாட்களில் சிறு குறிப்பாக மட்டுமே வந்துள்ளது.ஆனால் தற்போது இதன் பிரமாண்டத்தை கண்டு சிறிது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.தவிர மற்ற மாநில ஊடகங்கள் சிறு குறிப்பு கூட வரையவில்லை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...