செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தப்பி விடக் கூடாது

அதிமுகவின் இரு பிரிவுகள் இணைந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலை மினி கூவத்தூராக மாற்றியுள்ளது தினகரன் தரப்பு. 

பலத்த கண்காணிப்பு இங்குதான் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தினகரன் தரப்பு தங்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள்., பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனராம். 

யாரும் தப்பி விடக் கூடாது என்று கண்காணிக்கப்படுகின்றனராம். 
மொத்தமாக ராஜ்பவனுக்கு வந்தனர் அங்கிருந்துதான் இவர்களை பத்திரமாக ராஜ்பவனுக்குக் கூட்டி வந்துள்ளனர். 

மீண்டும் ஒரு கூவத்தூர் காலத்தை நோக்கி தமிழகம் போகுமா அல்லது புதுத் தேர்தலுக்குத் தயாராகுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். 

கூவத்தூருக்குப் பிறகு சசிகலா கதி கூவத்தூர் கேம்ப்பின்போதுதான் சசிகலா சிறைக்குப் போக நேரிட்டது. 
தற்போது தினகரன் தரப்பு அதேபோன்ற பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. 


இது அந்தத் தரப்புக்கு சற்றே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் நிதானம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். 
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று தனித்தனியே கடிதம் தந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
"முதல்வர் பழனிச்சாமி மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; முதல்வர் பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ.வாகிய நானும் நம்பிக்கை இழந்துவிட்டேன்.

ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இக்கடிதம் மூலம் திரும்பப் பெறுகிறேன். 

என்னுடைய இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை ஊக்குவிக்கிறார் முதல்வர் நேர்மையற்றவராகவும் பாரபட்சம் காட்டக் கூடியவராகவும் இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழலை ஊக்குவிப்பதால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 
அதிகார துஷ்பிரயோகத்தை... எடப்பாடி பழனிச்சாக்கான ஆதரவை வாபஸ் பெற்றாலும்கூட நான் அதிமுகவின் உறுப்பினரே. அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தும் வகையில்தான் ஆதரவை வாபஸ் பெறுகிறேன். 
ஓபிஎஸ் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் அதிகரித்துள்ளது. ஊழலை மறைக்கவே ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அதிமுக எம்.எல்.ஏக்கள் 22 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 


இது தொடர்பாக ஸ்டாலின் அனுப்பியுள்ள கடித விவரம்: 

"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் இன்று கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.

கர்நாடகாவை போல... இதேபோல் ஒரு சூழல் கர்நாடகாவில் ஏற்பட்ட போது அம்மாநில ஆளுநர், முதல்வராக இருந்த எடியூரப்பா பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட்டிருந்தார்.

 முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் எந்த ஒரு காலதாமமும் காட்ட கூடாது. குதிரைபேரம் அப்படியான காலதாமதமானது அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு அரசு தொடர வழிவகை செய்யும். 

ஜனநாயக மாண்புகளை சீர்குலையச் செய்துவிடும். 
முந்தைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்ததைப் போன்ற குதிரை பேரங்களுக்கு வழிவகுத்துவிடும். 

பொம்மை வழக்கின் அடிப்படையில்... எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை உடனே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தின் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். "

 இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பன்னிர் -எடப்பாடி போன்ற ஒருகட்சியில் இரு அணிகளை வைத்து விளையாடி இணைவதை உலகநாயகன் கமல்ஹாசன் தனது "சத்யா"படத்திலேயே காட்டிக்கொடுத்து விட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...